தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து நடிகைகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
விஜே தீபிகா ஐஸ்வர்யாவாக நடித்து வந்த நிலையில் அவரது வெளியேற்றத்துக்கு பிறகு சாய் காயத்ரி இந்த சீரியலில் நடிக்க தொடங்கினார். தற்போது அவரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார்.
அதாவது சாய் காயத்ரி இனிய இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்காது. அது என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு பிரச்சனையாக அமைந்துவிடும். ஆகையால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.