தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் மலையாளத்தில் வெளியான ஒரு சூப்பர் ஹிட் படத்தில் மலர் டீச்சராக அறிமுகம் ஆகி ரசிகர்களை கவர்ந்தார்.
இதைத் தொடர்ந்து தெலுகு தமிழ் என இரண்டு, மொழிகளிலும் அடியெடுத்து வைத்து வெற்றி கண்டார். தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி அஜித் விஜய் படங்களில் நடிக்க அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாக தகவல் பரவியது. இது குறித்து சாய் பல்லவி பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என தெரிவித்த அவர் அஜித், விஜய் படங்களில் நடிக்க தனக்கு ஒரு வாய்ப்பு கூட வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
