தமிழ் திரையுலக முன்னணி நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. முதன் முதலில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தியா எனும் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஆனால் அதற்க்கு முன்பே மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டார்.
தியா படத்தை தொடர்ந்த தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே, என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்..
இந்நிலையில் சமீபத்தில் நடிகை சாய் பல்லவி கலந்து கொண்ட பேட்டியில் தனது திருமணம் குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார். இதில் அவர் கூறியதாவது :
” திருமணம் ஆகிவிட்டால் பெற்றோர்களை பிரிந்து என் கணவரின் வீட்டிற்கு செல்லும் நிலை எனக்கு ஏற்படும். அதனால் நான் என் வாழ்க்கையில் இறுதி வரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன். கடைசி வரை திருமணம் செய்துகொள்ளாமல் என் தாய், தந்தையை சொந்தோஷமாக பார்த்து கொள்வேன் ” என கூறியுள்ளார்.
இவரின் தீடீர் முடிவு, இவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ளீஸ் உங்களின் முடிவை மாற்றி கொள்ளுங்கள் என்றும் பலரும் நடிகை சாய் பல்லவிக்கு சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.