தமிழ் சினிமாவில் பிரபலன் நடிகராக இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். ஏ ஆர் ரகுமானின் உறவினரான இவர் பாடகி சைந்தவியை பல வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தான் அன்வி என்ற மகள் பிறந்தார். இந்த நிலையில் 11 வருட திருமண வாழ்க்கை பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தங்களது விவாகரத்தை அறிவித்திருந்தனர்.
இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் சைந்தவி தனது கர்ப்பம் குறித்து ஜிவி பிரகாஷ் நம்பவில்லை என்று அளித்த த்ரோ பேக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அதிகாலையில் பிரக்னன்சி டெஸ்ட் கிட்ட செக் பண்ணி பார்த்தேன் பாசிட்டிவ் என வந்தது. ஜிவி பிரகாஷ் தூக்கத்திலிருந்து எழுப்பி கிட்டை காட்ட அவரு இது என்ன தெர்மாமீட்டரா என்று கேட்டார். தெர்மாமீட்டர் இல்ல பிரக்னன்சி கிட் என்று சொன்னேன். அடுத்த கேள்வியாக யாருடையது என்று கேட்டார். பேபி ஃபாம் ஆகி இருக்கு என்று சொன்னதும் அவர் இழுத்து போத்திக்கொண்டு தூங்கி விட்டார்.
பிறகு விடிந்தது நீ என்கிட்ட ஏதாவது சொன்னீங்க கனவு கண்ட மாதிரி இருந்தது என்று சொல்ல மீண்டும் அதே பிரக்னன்சி கிட்டை காட்டி பேபி ஃபாம் ஆகி என்ற சொல்லியும் அவர் நம்பவில்லை. பிறகு டாக்டரிடம் சென்று ஸ்கேன் கன்பார்ம் செய்ததும் தான் நம்பினார். ரொம்ப சந்தோஷப்பட்டார். குழந்தை பிறந்த பிறகு எப்பவும் குழந்தையோடு தான் விளையாடிக் கொண்டிருப்பார் என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குழந்தைக்கு நான்கு வயசாகும் நிலையில் அந்த குழந்தையை பற்றி நினைத்து பார்த்திருக்கலாம். விவாகரத்து முடிவை கைவிட்டு இருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.