தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் சாக்ஷி அகர்வால். மாடலிங் துறையை சார்ந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவருக்கும் பரீட்சையமானார். இதற்கு முன்பு வெள்ளி திரையில் ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சைடு ரோலில் நடித்திருந்த இவர் தற்போது நான் கடவுள் இல்லை, பகீரா உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இதற்கிடையில் பட வாய்ப்புகளை மேலும் அதிகரிக்க செய்ய அவ்வப்போது போட்டோ ஷூட் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் சாக்ஷி அகர்வால் தற்போது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
View this post on Instagram