Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்.வைரலாகும் போட்டோஸ்

sakshi-agarwal latest post-goes-viral

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். இவர் தமிழில் ரஜினிகாந்தின் ‘காலா’, அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’, சுந்தர் சி.யின் ‘அரண்மனை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆக்ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப்பெண் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் அசத்தி வரும் சாக்ஷியின் திறமை, பிற மொழி படைப்பாளிகளையும் கவர்ந்துள்ளது.இவர் தற்போது மலையாள நடிகர் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கிறார்.

மேலும், கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் மிக வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார்.இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் சாக்ஷி அகர்வால் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக உள்ளார். இந்நிலையில், இவர் டார்ஜிலிங்கிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்யும் ரசிகர்கள் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.