பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவருக்கு தான் முதல் குறும்படம் போட்டு காட்டப்பட்டது என்றே சொல்லலாம். கவினுடன் காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார்.
ரஜினியுடன் காலா, அஜித்துடன் விஸ்வாசம் படங்களில் நடித்த சாக்ஷி தற்போது சிண்ட்ரெல்லா, டெடி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுவார்.
இந்நிலையில் ஸ்கூல் படிக்கும் போது உடல் எடை அதிகரித்திருக்கும் தோற்றத்திலும் தற்போதைய தோற்றத்திலும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதில் ஸ்கூல் படிக்கும் போது தன்னை குண்டு பூசணிக்காய் என கேலி கிண்டல் செய்வார்கள். ஆனால் என் கவனம் படிப்பின் மீதே தான் இருக்கும். இப்போது உடல் எடை குறைத்துள்ளதை எனக்காகவே நான் செய்துள்ளேன். நம்மை கிண்டல் செய்பவர்களை நாம் கண்டுகொள்ளவே கூடாது, அதை தான் தளபதியும் சொல்லியிருக்கார் என சாக்ஷி கூறியுள்ளார்.