Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்கும் சல்மான் கான்?

Salman Khan to star in Mohan Raja directed film

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘லூசிபர்’. இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். இதில் நடிகர் சிரஞ்சீவி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் நயன்தாராவும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியானால் நடிகர் சல்மான் கான் நடிக்கும் முதல் தெலுங்கு படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.