இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வாரிசு நடிகர்கள் கொடுத்த மன அழுத்தத்தினால் நடந்துள்ளது என்று சர்ச்சைகள் எழுந்துள்ளன.
சுஷாந்த் சிங் தற்கொலைக்கு சல்மான்கான், இயக்குனர் கரண் ஜோகர் ஆகியோர் காரணம் என்று வழக்கும் தொடர்ந்துள்ளனர். சல்மான்கான், கரண் ஜோகர், சோனம் கபூர், அலியாபட், சோனாக்சி சின்ஹா ஆகியோரை சமூக வலைத்தளத்தில் பின் தொடரும் ரசிகர்களும் குறைந்துள்ளனர்.
இந்தி பட உலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் உள்ளது என்று சாடிய கங்கனா ரணாவத்துக்கு இன்ஸ்டாகிராமில் கூடுதலாக 20 லட்சம் ரசிகர்கள் சேர்ந்துள்ளனர்.
சல்மான்கானை வலைத்தளத்தில் பின் தொடர்ந்த 10 லட்சம் ரசிகர்கள் வெளியேறி விட்டனர். சோனம் கபூர் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரையும் அலியாபட்டை 5 லட்சம் பேரையும் இழந்துள்ளனர். சல்மான்கானை வலைத்தளத்தில் பலரும் வசைபாடுகின்றனர்.
இதையடுத்து சல்மான்கான் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “சுஷாந்த் சிங் ரசிகர்களுக்கு உறுதுணையாக இருக்கும்படி எனது அனைத்து ரசிகர்களையும் வேண்டிக்கொள்கிறேன்.
அவர்களின் அவதூறு வார்த்தைகளை பொருட்படுத்தாமல் அதற்கு பின்னால் இருக்கும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நாம் விரும்பும் ஒருவரின் இழப்பு வலி மிகுந்தது. எனவே அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆதரவாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.