நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இத்தொடருக்கு தடைவிதிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
சர்ச்சைகள் ஒரு புறம் இருந்தாலும் நடிகை சமந்தா, தற்போது இந்த தொடரின் புரமோஷன் பணிகளில் பிசியாக ஈடுபட்டுள்ளார். அப்போது நடிகை சமந்தாவிடம், பாலிவுட்டில் எந்த நடிகருடன் ரொமாண்டிக் படத்தில் நடிக்க ஆசை என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை சமந்தா, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார். நடிகை சமந்தா இதுவரை பாலிவுட் படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.