தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் யசோதா திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து சகுந்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இது தொடர்பான பிரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகை சமந்தா, விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து நடித்து வரும் குஷி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ஷிவா நிர்வாணா இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பல மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமந்தாவின் உடல்நல குறைபாட்டால் நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது மீண்டும் தொடங்கப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.
Whole heart🤍#Kushi @TheDeverakonda @ShivaNirvana @MythriOfficial pic.twitter.com/HwqZtd4v8k
— Samantha (@Samanthaprabhu2) March 23, 2023