தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. திடீரென மயோடிசிஸ் எனும் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமாவில் இருந்து விலகி சிகிச்சை பெற்று வரும் சமந்தா அடிக்கடி சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களோடு உரையாடி வருகிறார்.
அந்த வகையில் உரையாடிய போது ரசிகர்களின் கேள்விகளுக்கு சமந்தா பதில் அளித்தார். சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பெரிய விஷயம் என்ன? என்ற கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த சமந்தா, “என்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை எல்லாம் அறியாமல் இருந்தது தான் என்னுடைய வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு,” என்று தெரிவித்தார்.