Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தற்காப்பு கலை கற்கும் சமந்தா.. காரணம் இதுதான்!

Samantha learns martial arts

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா ‘பேமிலிமேன் 2’ என்ற வெப் தொடரில் நடித்ததன் மூலம் இந்தி திரையுலகிலும் பிரபலமானார். இதில் பெண் போராளியாக வந்து அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

இதையடுத்து மீண்டும் ராஜ் மற்றும் டீ கே இயக்கும் இந்தி வெப் தொடரில் சமந்தா நடிக்க இருக்கிறார். இதில் இந்தி நடிகர் வருண் தவானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த தொடரிலும் சமந்தாவுக்கு சண்டை காட்சிகள் இருப்பதால் தற்காப்பு கலையை கற்றுக் கொள்ளும்படி படக்குழுவினர் அறிவுறுத்தி இருந்தனர். இதையடுத்து தற்காப்பு கலை பயிற்சியை தற்போது சமந்தா தொடங்கி இருக்கிறார்.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பிரபல தற்காப்பு கலைஞர்கள் மும்பை வந்து சமந்தாவுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். குத்துச்சண்டை, கராத்தே உள்ளிட்ட பல சண்டை பயிற்சிகளை அவர் கற்று வருகிறார். இந்த பயிற்சி முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.