கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் தெலுங்கு பிரபல நடிகர் நாகார்ஜுன் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா.
இவர் திருமணத்திற்குப் பிறகும் தனது மார்க்கெட்டை இழக்காமல் முன்னணி நடிகையாக விளங்குகிறார். தற்போது இவர் தெலுங்கில் ஒரு படத்திற்காக 3.5 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.
இதுவரை நயன்தாரா தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்த நிலையில் அவருக்கு போட்டியாக தற்போது சமந்தாவும் களமிறங்கியுள்ளார்.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவின் நடிப்பை பார்த்து பாராட்டாதவர்களே இல்லை எனலாம். பிரேம் குமார் இயக்கத்தில் அவர் நடித்த ஜானு படம் தோல்வி அடைந்தது.
அதன் பின் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானுவை பார்த்தவர்கள் சமந்தா ஓவர் ஆக்டிங் செய்துவிட்டார், த்ரிஷா போன்று இயல்பாக நடிக்கவில்லை என்று விமர்சித்தார்கள்.
ரசிகர்கள் மத்தியில் சீரியல்களும் அதிக வரவேற்ப்பை பெற்று வருவதால், தற்போது சீரியலிலும் நடிக்க போவதாகவும் சமந்தா திட்டமிட்டுள்ளார்.