தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவர் பேஷன் டிசைனர் கம்பெனி ஒன்றை தொடங்கி தொழிலதிபராக மாறியுள்ளார்.
இது குறித்து சமந்தா கூறியிருப்பதாவது, எனக்கு பேஷன் டிசைனர் ஆக வேண்டும் என்பது ஆசை. பேஷன் டிசைன் மீது கொண்ட காதலால் தான் இந்த கம்பெனியை உருவாக்கி உள்ளேன் என கூறியுள்ளார்.
நடிகை சமந்தாவின் புதிய முயற்சிக்கு ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.