புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த பிரேம்குமார், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் துக்ளக் தர்பார் திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய சம்யுக்தா, துக்ளக் தர்பார் படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரை திரையில் காண ஆவலுடன் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.