நடிகை சனம் ஷெட்டியின் அனைவரும் அறிவார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான தர்ஷணின் முன்னாள் காதலி இவர். கடந்த சில நாட்களுக்கு முன் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனையாகி பின் பிரிந்தனர்.
தற்போது ஊரடங்கால் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடந்த சாத்தான் குளம் தந்தை மகன் காவலர்களால் தாக்கப்பட்டு இறந்த சம்பவத்திற்கு நீதி பிரபலங்கள் உட்பட பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சனம் இச்சம்பவத்தில் இறந்தவர்களுக்காக நியாயம் கேட்டும் காவலர்கள் மீது குற்றம் சாட்டி மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளாராம்.
மேலும் அனைவரையும் இச்சம்பவத்தில் நீதி கேட்டு புகார் அளிக்கும் படி கேட்டுள்ளார்.