Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்காத விஜய் மனைவி சங்கீதா.?? வெளியான தகவல்.!!

sangeetha vijay absent on varisu audio launch

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் பொங்கலுக்கு வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

வம்சி பைடம்பள்ளி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், சங்கீதா, குஷ்பூ, ஜெயசுதா என பலர் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

பொதுவாக தளபதி விஜய் தன்னுடைய பட விழாக்களில் தனது மனைவி சங்கீதாவுடன் பங்கேற்பது தான் வழக்கம். ஆனால் இந்த வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜயின் மனைவி சங்கீதா பங்கேற்கவில்லை. அதேபோல் அட்லி வீட்டு சீமந்த நிகழ்ச்சியிலும் சங்கீதா பங்கேற்கவில்லை.

இதற்கான காரணம் என பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்த நிலையில் தற்போது உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. விஜயின் மகள் மற்றும் மகன் என இருவரும் வெளிநாட்டில் படித்து வருவதன் காரணமாக சங்கீதா அவர்களுடன் இருந்து வருவதாகவும் அதன் காரணமாகவே அவர் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

sangeetha vijay absent on varisu audio launch
sangeetha vijay absent on varisu audio launch