Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருக்கும் சங்கமித்ரா படம் குறித்து வெளியான அப்டேட்

sanghamitra-movie latest update

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா. இருவரும் சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருக்கும் சங்கமித்ரா திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். அதாவது சுந்தர் சி இயக்கத்தில் மாபெரும் பொருட்செலவில் உருவாக இருக்கும் திரைப்படம் தான் சங்கமித்ரா.

சில பல காரணங்களால் கைவிடப்பட்டிருந்த இப்படத்தை மீண்டும் தொடங்க பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது. அதன்படி மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் இணையத்தில் பயங்கரமாக பரவி வருகிறது.

sanghamitra-movie latest update
sanghamitra-movie latest update