தமிழ் சினிமாவில் மரகத நாணயம், டார்லிங் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நிக்கி கல்ராணி. தமிழ் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த இவர் மரகதநாணயம் படத்தில் இணைந்து நடித்த நடிகர் ஆதியை காதலித்து வந்தார்.
இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் முடிந்தது இதனையடுத்து இந்த மாதம் திருமணம் நடந்துமுடிந்தது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் இவர்களின் திருமணத்திற்கு வாழ்த்துக் கூறி இருந்தனர்.
இந்த நிலையில் நிக்கி கல்ராணிக்கு திருமணமான அதே தினத்தில் அவருடைய அவர்களுக்கு சஞ்சனா கல்ராணி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இருவருக்கும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.