தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கும் அஜித் 61 என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் பேங்க் கொள்ளையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தில் பிக் பாஸ் கவின் உட்பட பலர் இணைந்து நடித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் படத்தில் தெலுங்கு நடிகர் அஜய் வில்லனாக நடிப்பதாக சொல்லப்பட்டு வந்தது.
இப்படியான நிலையில் இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் மெயின் வில்லனாக யாரும் எதிர்பாராத நடிகர்கள் ஒருவர் நடிக்கிறார். அவர் வேறு யாருமில்லை கே ஜி எஃப் உள்ளிட்ட பல்வேறு படங்களில் மிரட்டிய சஞ்சய் தத் தான் என சொல்லப்படுகிறது.
இவர் இந்த படத்தில் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அஜித் 61 திரைப்படத்தில் மிரட்டலான சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

sanjay-dutt-in-ajith-61-movie