Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது துபாய் அரசு

Sanjay Dutt receives UAE's golden visa

அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும்.

இந்த விசாவை பெற பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விண்ணப்பித்தார். இதனை பரிசீலனை செய்த துபாய் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டவர் விவகாரங்கள் துறையின் பொது இயக்குனர் முகம்மது அகமது அல் மர்ரி, சஞ்சய் தத்துக்கு கோல்டன் விசா வழங்கினார். நடிகர் சஞ்சய் தத் அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றுள்ள தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு அவரது ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.