Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கிக் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த சந்தானம்.

santhanam about kick movie

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கிக்’. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். கிக் பட டப்பிங் பணியில் சந்தானம் ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. கிக் பட டப்பிங் பணியில் சந்தானம் இந்நிலையில், ‘கிக்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சந்தானம் ‘கிக்’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார்.