முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின் மூலம் நகைச்சுவை கலைஞராக லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார் நடிகர் சந்தானம்.
மேலும் பல தமிழ் படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தது போதும் என ஹீரோவாக களமிறங்கி தற்போது ரசிகர்களை எண்டர்டெயின்மெண்ட் செய்து ஒரு ஹீரோவாக தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து இருக்கிறார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, ஏ 1 ஆகிய படங்கள் வசூலில் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது இவர் பிஸ்கொத்து, டிக்கிலோனா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சந்தானத்தின் முழு சொத்து மதிப்பு குறித்து சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
* நடிகர் சந்தானம் ஒரு படத்திற்க்கு வாங்கும் சம்பளம் மட்டுமே ரு. 2 கோடி.
* இவர் பயன்படுத்தும் விலை உயர்ந்த காரின் விலை சுமார் ரு. 3.5 கோடி என தகவல்கள் கூறுகின்றன.
* மேலும் நடிகர் சந்தானத்தின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 100 கோடி என தகவல்கள் தெரிகின்றன.
மேலும் இவை அனைத்தும் அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை, பிரபல தளத்தில் வெளிவந்த தகவலை தொகுத்து வழங்கி இருக்கிறோம்.