Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் இதோ

santhanam-new movie dubbing update

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் தற்போது இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்தில் சுஷ்மிதா அன்புசெழியன், பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, முனீஷ்காந்த், மனோபாலா, பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணியை நடிகர் சந்தானம் தொடங்கியுள்ளார். இதனை சந்தானம் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.