தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
அதேபோல் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் நேருக்கு நேராக பொங்கலுக்கு மோதிக்கொள்ள உள்ளன. ரசிகர்கள் அனைவரும் இந்த படங்களுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெறப்போவது வாரிசா? அல்லது துணிவா? என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் நடிகர் சந்தானம் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது பத்திரிக்கையாளர் ஒருவர் நீங்கள் வாரிசு மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களில் எந்த படத்தை பார்ப்பீர்கள் என கேள்வி எழுப்புகிறார்.
உடனே சந்தானம் அந்த நிருபரை அழைத்து நீங்கள் எந்த படத்தை பார்ப்பீர்கள் என கேட்க அவர் இரண்டு படத்தையும் பார்ப்பேன் என பதில் அளித்துள்ளார். நீங்க மட்டும் இரண்டு படத்தையும் பார்ப்பீங்க நான் பார்க்க கூடாதா? என நெத்தியடி பதிலளித்துள்ளார்.

santhanam-reply-on-varisu-vs-thunivu movie