ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் சர்வர் சுந்தரம். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பட், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்தது. சில முறை ரிலீஸ் தேதிகள் அறிவித்தும் தள்ளிப்போனது.
இந்நிலையில் இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் படமும் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.