தளபதி விஜயை தலைக்கணம் பிடித்தவர் என நினைத்தேன், ஆனால் அவர் அப்படி இல்லை என பிரபல நடிகை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடன் நடித்த நடிகர், நடிகைகள் எல்லோரும் விஜய் பற்றி பெருமையாக கூறி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது தளபதி விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த சரண்யா மோகன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசியுள்ளார்.
அதாவது நான் விஜயை முதலில் காதலுக்கு மரியாதை படத்தில் நடித்த போது தான் பார்த்தேன். அப்போது நான் சிறு குழந்தையாக இருந்தேன்.
முதலில் விஜய் தலைக்கணம் பிடித்தவர் என்று தான் நினைத்தேன். ஆனால் அவருடன் வேலாயுதம் படத்தில் நடித்த போது தான் அவர் எவ்வளவு அன்பானவர் என்பதை தெரிந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.