Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சர்தார் படத்தில் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் சூப்பர் ஹிட் அப்டேட்

sardar movie trailer latest update

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக திரைக்குவர தயாராக இருக்கும் திரைப்படம் தான் “சர்தார்”. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்க ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி இருக்கும் இப்படதை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியிட உள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள சர்தார் படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான “ஏறுமயிலேறி” என்ற பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து சர்தார் திரைப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் அக்டோபர் 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.