Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் சிங்கிங் ஷோ என்றாலே ஜீ தமிழின் சரிகமப தான் எனும் அளவிற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக விளங்கி வருகிறது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்.

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பாக நேற்று ( டிசம்பர் 17 ) மாலை 4 மணி முதல் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் ஒளிபரப்பானது.

யுவன் சங்கர் ராஜா முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் மக்கள் தேர்வு செய்த பாடல்கள், சேலஞ்சிங் ரவுண்ட் என மிகவும் சவால்கள் நிறைந்த இரண்டு சுற்றுகள் நடைபெற்றது. இறுதியாக மக்களின் ஓட்டுக்கள் மற்றும் நடுவர்களின் மதிப்பெண் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த ஈழத்துப் பெண்ணான கில்மிஷா முதலிடத்தை பிடித்து சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் டைட்டிலையும் 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையையும் வென்றுள்ளார்.

கில்மிஷாவை தொடர்ந்து முதல் ரன்னராக ருத்ரேஷ் மற்றும் இரண்டாவது ரன்னராக சஞ்சனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் ருத்ரேஷுக்கு மூன்று லட்சம் ரூபாய் பரிசு தொகையில் சஞ்சனாவிற்கு 2 லட்சம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தொடர்ந்து ரிக்ஷிதா நான்காவது இடத்தை பிடித்துள்ளார். மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த கிராண்ட் பைனல் நிகழ்ச்சியை அர்ச்சனா மற்றும் ஆர் ஜே விஜய் ஆகியோர் தொகுத்து வழங்க ஸ்ரீநிவாஸ், கார்த்திக், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saregamapa title winner update
Saregamapa title winner update