Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் சங்கத்திற்கு சசிகுமார் வைத்த கோரிக்கை. வைரலாகும் தகவல்

sasikumar latest speech-goes-viral

“நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. இவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜயகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்த் இல்லத்திற்கு இயக்குனர் சசிக்குமார் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு அவரின் புகைப்படத்தை வணங்கி அஞ்சலி செலுத்தினார். மேலும், தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்.பின்னர் பேசிய அவர், நடிகர் சங்க கடனை அடைத்து மீட்டெடுத்த மிகப்பெரிய ஆளுமையான விஜயகாந்தின் பெயரை புதிய நடிகர் சங்க கட்டிடத்திற்கு சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.”,

sasikumar latest speech-goes-viral
sasikumar latest speech-goes-viral