Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அவங்க சம்மதத்துடன் தான் அப்படி மேடையில் பேசினேன்.. சர்ச்சை கருத்துக்கு நடிகர் சதீஷ் விளக்கம்

Sathiesh explanation about sunny leone and Dharsha controversy speech

இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்த்திருக்கும் படம் ‘ஓ மை கோஸ்ட்’. இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், ‘குக் வித் கோமாளி’ புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே.சசிகுமார் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் சதீஷ், “மும்பையைச் சேர்ந்த சன்னி லியோனே நமது பாரம்பரிய உடையான சேலையில் வந்திருக்கிறார். கோயம்புத்தூர் பொண்ணு தர்ஷா குப்தா எப்படி உடையணிந்து வந்திருக்கிறார் பாருங்க” என்று பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கு பல கண்டன குரல்கள் எழுந்துள்ளது. மேலும் திரைப்பிரபலங்கள் இயக்குனர் நவீன் உள்ளிட்ட சிலர் தங்களின் கண்டனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் கண்டன குரல்கள் எழுந்த நடிகர் சதீஷின் பேச்சு குறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், “ஓ மை கோஸ்ட் பட இசை வெளியீட்டு விழாவில் என் அருகில் நடிகை தர்ஷா குப்தா அமர்ந்திருந்தார். அவர் என்னிடம், என்னைப் பாருங்க சன்னிலியோன் போன்று மாடர்னாக டிரஸ் போட்டு வந்துருக்கேன். சன்னி லியோன் எப்படி வருவார் எனப் பாப்போம் என்றார்.

ஆனால் சன்னி லியோன் பட்டுப் புடவையில் வந்திருந்தாங்க. சன்னி லியோனை பார்த்த தர்ஷா அப்சட் ஆகிட்டதா என்னிடம் சொன்னாங்க. மேலும் தர்ஷா குப்தா அப்சட் ஆனதை மேடையிலும் என்னை சொல்ல சொன்னாங்க. அதன் காரணமாகத்தான் நானும் மேடையில் பேசினேன். ஆனால் என் பேச்சிக்கு சிலர், பெண்கள் உடை உடுத்துவது அவர்களின் உரிமை எனக் கருத்து தெரிவித்தனர்.

அது உண்மைதான். பெண்களும் சரி ஆண்களும் சரி உடை உடுத்துவது அவரவர்களின் சுதந்திரம்தான். ஆனால் இது இரு நண்பர்கள் இடையே ஜாலியா பேசினது, தர்ஷா சொல்ல சொன்னாங்க அதனால அவங்க சம்மதத்துடன் தான் மேடையில் பேசினேன். ஆனால் சில பேர் நான் எல்லாரையும் குறிப்பிடுவது போல் சீரியஸாக எடுத்துக் கொண்டனர். இருப்பினும் இந்த கருத்துக்களை நான் ஆரோக்கியமாக எடுத்துக் கொள்கிறேன். அதேபோல் நான் நிறைய நல்ல விஷயங்களையும் பேசியிருக்கிறேன். இந்த விஷயத்திற்கு ரியாக்ட் பண்ணது போல் அந்த நல்ல விஷயத்தையும் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும்” என்றார்.