தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகி ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள கூலி படத்தில் நடிக்க உள்ளார்.
துபாய் சென்று வந்த ரஜினிகாந்த் தற்போது இமய மலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். திரும்பி வந்ததும் கூலி படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க போவதை நடிகர் சத்யராஜ் உறுதி செய்துள்ளார். 38 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால் கூலி திரைப்படம் ரஜினி, சத்யராஜ் ரசிகர்களுக்கு தரமான சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.