Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல நடிகர் படத்தில் இருந்து விலகிய சாயிஷா

Sayesha withdraws from popular actor film

போயபடி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது. கோரோனா அச்சுறுத்தலால் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துப் படக்குழு திரும்பியது. நாயகியை ஒப்பந்தம் செய்யாமலேயே முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்தது.

இது இரண்டு நாயகிகளைக் கொண்ட கதை என்பதால், பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. முதலில் ‘பிசாசு’ படத்தில் நாயகியாக நடித்த பிரயாகா ஒப்பந்தமானார்.

ஆனால், தேதிகள் பிரச்சினைகள் காரணமாக படத்திலிருந்து அவர் விலகவே, சாயிஷா சைகல் ஒப்பந்தமானார். இதனை போயபடி சீனு தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், தற்போது சாயிஷா சைகலும் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பிரயகா ஜெய்ஷ்வால் ஒப்பந்தமாகியுள்ளார். இன்னொரு நாயகியாக பூர்ணா நடிக்கவுள்ளார்.