தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் குடும்ப ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது. மேலும் இந்த படம் முதல் நாளே 15.21 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இந்த நிலையில் இரண்டாவது நாளிலும் நல்ல வசூல் கிடைத்துள்ளது. ஆம் தமிழகத்தில் இந்த படம் 9.36 கோடி வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இந்த இரண்டு நாளில் ரூபாய் 24.57 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Second Day BO Report of Etharkum Thuninthavan