தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து நான்காவது சீசன் கடந்த சனிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் புது கோமாளிகள் களம் இறங்க குக்குகளாக பாக்கியலட்சுமி சீரியல் விஷால், ராஜ் ஐயப்பா, காளையன், விசித்ரா, ஷெரின், வெளிநாட்டு நடிகை ஆன்டி உட்பட பலர் பங்கேற்று உள்ளனர்.
மேலும் இந்த போட்டியில் கடைசி ஒரு போட்டியாளர் பங்கேற்க இருப்பதாகவும் அவர் நேரடியாக அடுத்த ரவுண்டில் பங்கேற்க இருக்கிறார் எனவும் ரக்சன் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் அவர் பிக் பாஸ் போட்டியாளரான திருநங்கை ஷிவினாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மற்றொரு தரப்பினர் அது மையம் கோபி என கூறி வருகின்றனர்.
இது எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.