தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று தளபதி விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டிபி புகைப்படத்தை மாற்றியிருந்தார்.
திடீரென டிபி புகைப்படத்தை மாற்றியதற்கு பின்னால் சில காரணங்கள் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் அது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது டிவிட்டரில் 4 மில்லியன் பேர் பின்தொடரும் நிலையில், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே!’ என்று சொல்வதோடு நிறுத்தாமல் அதனை நடைமுறைப்படுத்தும் விதமாக, தன் ரசிகன் உருவாக்கிய ஒரு டிஜிட்டல் புகைப்படத்தினை தான் பிராஃபெயில் படமாக மாற்றியதாக தெரியவந்துள்ளது.
தன் ரசிகனுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் தளபதி என்றும் தவறியதில்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்று என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.