தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்று துப்பாக்கி.
மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது விஜய் இல்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?? ஆமாம் முருகதாஸ் இந்த படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம் தான் கூறியுள்ளார். இந்தக் கதையோடு சேர்த்து ஏழாம் அறிவு படத்தின் கதையை கூற இதனை ஏழாம் அறிவு படத்தை பண்ணி விட்டு பிறகு துப்பாக்கி படம் பண்ணலாம் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் முருகதாஸை தொடர்புகொண்டு விஜய்க்கு ஒரு கதை சொல்லுங்கள் என கேட்க அவர் துப்பாக்கி படத்தின் கதையைக் கூறி உள்ளார். இப்படித்தான் இந்த படம் விஜய் கைக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒருவேளை துப்பாக்கி படத்தில் விஜய்க்கு பதிலாக சூரியா நடித்திருந்தால் படம் எப்படி இருந்திருக்கும் என்பதை எங்களுடன் கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க.
