Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் சீமான். எந்த கதாபாத்திரம் தெரியுமா? வைரலாகும் தகவல்

seeman-act-father-role-in-pradeep-movie update

இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘எல்.ஐ.சி’ படத்தில் சீமான் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விவசாயி கதாபாத்திரத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்து வருவதாகவும் கோயம்புத்தூரில் நடைபெற்ற நான்கு நாட்கள் படப்பிடிப்பு இவர் கலந்து கொண்டதாகவும் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

seeman-act-father-role-in-pradeep-movie update
seeman-act-father-role-in-pradeep-movie update