Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரகாஷ்ராஜ் ,சிவராஜ்குமார் தொடர்ந்து சித்தாரத்துக்கு ஆதரவாக பேசிய சீமான்.

seeman latest speech viral

அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்த ‘சித்தா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியானது. ‘சித்தா’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்றார். அங்கு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கன்னட அமைப்பினர் இந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்பினர், தமிழ்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழ் நடிகரான சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் சித்தார்த்திற்கு ஆதரவாக பிரகாஷ் ராஜ், சிவராஜ்குமார் என பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சித்தார்திற்கு ஆதரவாக பேசியுள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “யஷ் நடித்து ‘கே.ஜி.எப்’ இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. அதற்கு நாம் எந்த இடையூறும் பண்ணவில்லை. ஆனால், விஜய், மற்ற நடிகர்கள் படத்தை அவர்கள் வெளியிட விடுவதில்லை. வேறு படங்கள் கர்நாடகாவில் ஓடுகிறது. பக்கத்து மாநிலத்தவர் நான் தயாரித்த படங்கள் அங்கு வெளியிட முடியவில்லை. உலக சந்தையாக இருக்கும் என் நாட்டில் உள்ளூர் சந்தை எடுபடவில்லை.

‘கே.ஜி.எப்’ திரைப்படம் வெளிவரும் போது தடுக்க எனக்கு எவ்வளவு நேரமாகும். சித்தார்த்திற்கும், தண்ணீர் பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஒரு கலைஞர். அவர் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்கவும் இல்லை. அது அரசியல் தலைவர்கள் பேசி தீர்வு காண வேண்டும்” என்று கூறினார்.

seeman latest speech viral
seeman latest speech viral