தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது கோட் படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தை முடித்ததும் அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்காக தளபதி விஜய் தயாராகி வரும் நிலையில் நடிகரின் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் 2026 இல் விஜய்யுடன் இணைய காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்திற்கான மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பு வந்தால் நிச்சயம் கலந்து கொள்வேன் என தெரிவித்துள்ளார். அண்ணன் தம்பி சந்திப்பது வழக்கமான ஒன்று நானும் விஜயும் சந்தித்தால் அப்படித்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சீமானின் எதிர்பார்ப்புக்கு தளபதி விஜயின் செயல்பாடு என்னவாக இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
