Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிசாசு 2 படம் குறித்து சீனு ராமசாமி போட்ட பதிவு..

seenuraamasaami about pisasu 2 movie

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்ந்தவர் தான் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் சீன் ராமசாமி இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ள “பிசாசு 2” படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதாவது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் பிசாசு 2. இப்படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க நடிகை பூர்ணா விஜய் சேதுபதி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பல மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையில் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பை நேற்றைய தினம் படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி மனிதர்களை விட மிஸ்கினின் பிசாசு உன்னதமானது. லவ் டூ யூ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகிறது.