Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சீதாராமன் சீரியலில் புதிய ஹீரோயின் இவர்தானா? வைரலாகும் ஃபோட்டோ

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் சீதாவாக ரோஜா சீரியல் பிரபலமான பிரியங்கா நல்காரி நடித்து வந்தார்.

தனது எதார்த்தமான நடிப்பின் இவர் ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் சமீபத்தில் நீண்ட நாள் காதலர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவரின் வேண்டுகோளால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

இதனால் சீதாவாக நடிக்க போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்த நிலையில் சூப்பர் ஹிட் திரைப்பட நடிகை ஒருவர் நடிக்க போவதாக தகவல் வெளியானது, அந்த நடிகை யாரென்றால் மிகமிக அவசரம் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஸ்ரீ ப்ரியங்கா தான்.

இந்த படம் மட்டுமில்லாமல் மேலும் சில படங்களில் நடித்துள்ள இவர் சீதா ராமன் சீரியல் மூலமாக சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க உள்ளார். தற்போது இவர் சீதா கெட்டப்பில் இருக்கும் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

seetha raman serial latest update viral
seetha raman serial latest update viral