ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியல் நாயகியாக ரோஜா சீரியல் மூலம் பிரபலமடைந்த பிரியங்கா நல்காரி நடித்து வந்தார்.
ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் திடீர் திருமணம் செய்து கொண்ட பிரியங்கா தன்னுடைய கணவருக்காக இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஸ்ரீநிதி இனி சீதாவாக நடிக்க போகிறார் என தகவல் பரவ கடைசியில் அது உண்மை இல்லை என அவரே விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த சீரியலில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் ஆன படத்தில் நாயகியாக நடித்து பாராட்டுகளை பெற்ற இளம் நடிகை ஒருவர் தான் பிரியங்கா நல்காரியின் இடத்தை நிரப்ப போவதாக தகவல் ஒன்று பரவ தொடங்கி உள்ளது.
பாராட்டுகளை அள்ளிய படத்தின் நாயகியா? அந்த நடிகை யாராக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் சீரியல் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்து வருகிறது. வெகு விரைவில் இது குறித்த முழு விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
