செல்ஃபி
நடிகர் ஜி வி பிரகாஷ்குமார்
நடிகை வர்ஷா பொலம்மா
இயக்குனர் மதிமாறன்
இசை ஜி.வி.பிரகாஷ்குமார்
ஓளிப்பதிவு விஷ்ணு ரங்கசாமி
நாயகன் ஜி.வி.பிரகாஷ், தந்தை வாகை சந்திரசேகர் கட்டாயத்தின் பெயரில் ஊரிலிருந்து சென்னைக்கு வந்து விருப்பமில்லாமல் இன்ஜினீயரிங் படிக்கிறார். படிக்கும் போதே பணம் சம்பாதிக்க ஆசைப்படும் ஜி.வி.பிரகாஷ், கல்லூரியில் மாணவர்களை சேர்த்துவிடும் புரோக்கர் வேலை பார்க்கிறார். முதலில் சிறியதாக சம்பாதிக்கும் ஜி.வி.பிரகாஷ், பின்னர் பெரிய லாபத்திற்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.

இறுதியில் ஜி.வி.பிரகாஷ் சிக்கலில் இருந்து விடுபட்டாரா? இல்லையா? சிக்கலை எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், கல்லூரி மாணவனாக கனல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். நட்பு, அப்பா பாசம், காதல், சண்டைக்காட்சி, என நடிப்பில் பளிச்சிடுகிறார். குறிப்பாக அப்பா வாகை சந்திரசேகரிடம் கோபித்துக் கொள்வது.. பின்னர் அவரைப் பற்றி தெரிந்தவுடன் வருந்துவது என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். இறந்து போன நண்பனின் அம்மாவிடம் கலங்கிப்போய் நிற்கும்போதும், கோபத்தைக் காட்டும் போதும் கைதட்டல் பெற்றிருக்கிறார்.

கல்லூரியில் இடம் வாங்கித்தரும் தரகராக ரவி வர்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கவுதம் மேனன். அசத்தலான வில்லன் வேடத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்திருக்கிறார். நாயகி வர்ஷா பொல்லம்மா ஜி.வி.பிரகாஷுக்கு உறுதுணையாக நடித்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் நண்பராக வரும் டி.ஜி.குணாநிதி, நடிப்பில் கண்கலங்க வைத்திருக்கிறார். இவருக்கு முதல் படமே சிறப்பான அறிமுகம்.

கல்லூரி அதிபராக ஈஸ்வரமூர்த்தி கதாபாத்திரத்தில் சங்கிலி முருகன் நல்ல தேர்வு. தந்தையாக வரும் வாகை சந்திரசேகர் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். குணாநிதியின் தாயாக நடித்திருக்கும் ஸ்ரீஜா யதார்த்த நடிப்பை கொடுத்து மனதில் பதிந்திருக்கிறார். தங்கதுரை, சாம் பால் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

தனியார் கல்லூரிகளில் சீட் பெறுவதற்குத் தரகர்கள் மூலம் நடக்கும் விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது செல்ஃபி படம். சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் முறைகேடுகளை தைரியமாக சொல்லியிருக்கும் மதி மாறனுக்கு பாராட்டுகள். தெளிவான திரைக்கதை அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத காட்சிகள் என்று கட்டிப்போடுகிறார் இயக்குனர் மதி. பின்னணி இசை ஜி.வி.பிரகாஷ்குமார். விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு காட்சிகளைப் பதிய வைக்கிறது.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் பெரிய அளவு எடுபடவில்லை என்றாலும் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்புக்கு கைகொடுத்திருக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் மிரட்டலாக உள்ளது. தெளிவான திரைக்கதை அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத காட்சிகள் என்று கட்டிப்போடுகிறார் இயக்குனர் மதி. போலியான பெற்றோர்கள் காட்சி நல்ல திருப்பமாக அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார் மதிமாறன்.

ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். அதுபோல் போஸ்மேன் என்ற பாடல் ரசிக்க வைக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் நேர்த்தியான ஒளிப்பதிவு சிறப்பு.

மொத்தத்தில் ‘செல்ஃபி’ கல்வி மாஃபியா.

Selfi Movie Review
jothika lakshu

Recent Posts

Mazhai Yenave Video Song

Mazhai Yenave Video Song

8 hours ago

Election Official Trailer

Election Official Trailer

8 hours ago

வெண் பூசணிக்காயில் இருக்கும் நன்மைகள்..!

வெண் பூசணிக்காயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.இது மட்டும்…

13 hours ago

வெள்ளை நிற உடையில் க்யூட் போஸ் கொடுக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மீனா, போட்டோஸ் இதோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலை முதல் மற்றும் இரண்டாவது…

13 hours ago

காஜல் அகர்வாலா இது? லேட்டஸ்ட் புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழில் அஜித் விஜய் சூர்யா என பல நடிகர்களுக்கு…

13 hours ago

வக்கீல் கொடுத்த ஷாக்,அதிர்ச்சியில் குணசேகரன்,இன்றைய எதிர் நீச்சல் சீரியல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது…

14 hours ago