Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நானே வருவேன் கதையை நான் எழுதியது இல்ல.. ரகசியத்தை உடைத்த செல்வராகவன்

Selvaraghavan About Naane Varuven Movie Story

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் நாளை வெளியாக உள்ள சாணி காகிதம் படத்திற்காக இவர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் நானும் தனுஷும் 11 வருடத்திற்கு பிறகு இணைந்துள்ளோம். இதனால் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது புதுப்பேட்டை 2 படத்தை எடுக்கலாம் என யோசித்தோம்.

இந்த நேரத்தில்தான் தனுஷ் ஒரு கதையை எழுதி வந்து கொடுத்தார். கதை என்னை மிகவும் கவர்ந்தது. மேலும் கதை வலுவானதாகவும் சவால்கள் நிறைந்ததாக இருந்தது. தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் நானே வருவேன் படத்தின் கதை. திரைக்கதையை தான் நான் இயக்குகிறேன். கதை தனுஷ் உடையது என தெரிவித்துள்ளார்.

Selvaraghavan About Naane Varuven Movie Story
Selvaraghavan About Naane Varuven Movie Story