செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி நீண்ட காலம் கழிச்சு வெளியாகியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துச்சிருக்காய்ங்க. இந்த படம் தற்போது திரையரங்கில் வெளியாகி இருக்குது.
இந்நிலையில் இதுகுறித்த பேட்டியொன்றில் செல்வராகவனிடம் “படத்தில் கடவுள் மறுப்பாளராக காட்டப்பட்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ராம்சே என பெயர் வைக்கப்பட்டது கடவுள் மறுப்பாளரான ராமசாமியை குறிக்கும் விதத்திலா?” என்று கேட்கப்பட்டபோது செல்வராகவன் ஆமாம் என்று பதில் அளித்திருந்தார். இந்த படத்தில் சைக்கோ பாத்திரமாக வரும் ஒருவருக்கு ஈ.வெ.ரா பெயரை வைத்து செல்வராகவன் இழிவுபடுத்துவதாக பலர் சமூக வலைதளங்களில் விமர்சிக்க தொடங்கியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ள செல்வராகவன் “நண்பர்களே! அந்த நேர் காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்” என்று கூறியிருக்கிறார்.