தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். தனித்துவமான கதைகளை இயக்கி தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் தற்போது இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான பாகாசூரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் செல்வதாகவன் இப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகரின் பதிவிற்கு ரீ-ட்வீட் செய்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, ரசிகர் ஒருவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் காதல் கொண்டேன் படத்தின் புகைப்படத்தை பதிவிட்டு “விவேக் ஒரு காமெடியில் சொல்லுவார் இயக்குனர் ஒவ்வொரு frame செத்துகிருக்கார் அப்பிடி ஒரு படம் இது , அப்படி ஒரு இயக்குனர் செல்வராகவன் அது ஒரு காலம்” என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார்.
அதனை கண்ட செல்வராகவன் அதற்கு, ஏன் நண்பா நான் இன்னும் சாகவோ அல்லது ஓய்வு பெறவோ இல்லை. சிறிது நாட்கள் தனக்கான நேரத்தை செலவிட்டு வருகிறேன். நான் இன்னும் 40 வயதில் தான் இருக்கிறேன் மீண்டும் படம் பண்ணுவேன் என விளக்கம் அளித்து ரீ-ட்வீட் செய்திருக்கிறார். இந்த பதிவுகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
Why my friend ? I'm not dead or retired. I have just spent some time for myself. I'm just in my forties .. And I'm back. https://t.co/CYdLcoG97k
— selvaraghavan (@selvaraghavan) May 3, 2023