Tamilstar
News Tamil News

மிக பெரிய வியாதியாக இயக்குனர் செல்வராகவன் கருதுவது இதை தான். என்ன தெரியுமா?

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னை இயக்குநீர்களில் ஒருவர். இவரின் திரைப்படங்கள் அனைத்தும் தரமான படைப்புகளாக கூறப்படும்.

கடைசியாக இவர் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் என்.ஜி.கே. மேலும் புதுப்பேட்டை 2 படத்தின் கதையை உருவாக்கி வருவதாகவும் ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரின் ட்விட்டர் பக்கத்தில் “இருப்பதிலேயே மிக பெரிய வியாதி மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டு கொண்டே வாழ்வது தான், அது நிம்மதியை அடியோடு ஒழிந்துவிடும்.

கடவுள் யாரையும் குறைத்து படைப்பதில்லை, நான் மிக சிறந்தவன் என்பதை எப்பொழுதும் நினைபோம்” என பதிவிட்டுள்ளார்.