இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் ஒரு தனி ஆளுமையை பதிவிட்டார். அவருக்கான இடம் அவருக்கே என்று தான் சொல்ல வேண்டும்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மாலை நேரத்து மயக்கம் என அவரின் இயக்கத்தில் படம் வெளியானது. அடுத்ததாக தன் தம்பியான தனுஷை கொண்டு புதுப்பேட்டை 2 படத்தையும், நான் ருத்ரன் படத்தையும் இயக்குவதற்கான வேலைகளில் தற்போது ஈடுப்பட்டுள்ளாராம்.
இந்நிலையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி மூன்றாம் குழந்தைக்கு கர்ப்பமாக இருக்கிறார் என ரசிகர்கள் அவரின் புகைப்படத்தில் உருவ தோற்றத்தை வைத்து கேட்டுள்ளனர்.
அண்மையில் வெளியான கீதாஞ்சலியின் புகைப்படத்தையும் தற்போதை தோற்றத்தையும் கண்டு ரசிகர்கள் இப்படி கேட்டு வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.
கீதாஞ்சலி இது குறித்து தகவல் வெளியிடுவார்.